ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். 85 சதவீத ஆப்கானிஸ்தானை தாங்கள் கைப்பற்றி விட்டதாக இந்த பயங்கரவாத அமைப்பு கொக்கரித்துக் கொண்டிருக்கிறது.
இது உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக பல நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் ஆகியவற்றை எதிர்த்து பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன்காரணமாக முன்னதாக சீன கம்யூனிச அரசு ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த 112 சீனர்களை தனிவிமானம் மூலமாக தங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொண்டது. இது தாலிபான் அமைப்பினை அதிர்ச்சி அடையச்செய்தது. ஆப்கானிஸ்தானும் சீனாவும் தனக்கு எதிராக உள்ளன என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷகிங் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சீனாவின் ஜின் ஜியாங் மாகாணத்தில் இருந்து உய்குர் பழங்குடி இன மக்கள் உரிமைக்காக போராடும் ஆயுதமேந்திய போராளிகளுக்கு ஆப்கானிஸ்தானில் நுழைய தாலிபான்கள் தடை விதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.