பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விபத்தில் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலொவ்னாவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டி நிர்மானப் பணியில் ஈடுபட்டிருந்த பலுதூக்கியொன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அலுவலகம் ஒன்றின் மீதும் அதற்கு அருகாமையில் இருந்த முதியோர் இல்லம் மீதும் பலுதூக்கி வீழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர் எனினும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.