Home கனடா பிரம்டனில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் குறித்து மேயர் கவலை

பிரம்டனில் தடுப்பூசி ஏற்றாதவர்கள் குறித்து மேயர் கவலை

by Jey

பிரம்டனில் கொவிட் தடுப்பூசி ஏற்றாதவர்களின் எண்ணிக்கை குறித்து நகர மேயர் பெற்ரிக் பிறவுன் கவலை வெளியிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றாதவர்களின் பெருந்தொற்றாக பிரம்டன் மாற்றமடைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களை கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு ஊக்கப்படுத்துமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீல் பிராந்தியத்தில் 79 வீதமான மக்களுக்கு ஒரு மருந்தளவு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், 54 வீதமான மக்களுக்கு இரண்டு மருந்தளவு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முடக்க நிலையை இறுதி முடக்க நிலையாக கருதிக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என பிரம்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

related posts