சூறாவளியினால் Barrie நகரிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மிக மோசமாக தாக்கிய சூறாவளி காற்றினால் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் இதில் நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், வீடுகள் மற்றும் கட்டடங்கள் பலத்த சேதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர் வலயமொன்றில் ஏற்படும் ஆபத்துக்களை விடவும் மிகவும் மோசமானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிராந்திய வலயத்தில் சூறாவளியின் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பாரிய சூறாவளி தாக்கம் இடம்பெற்றும் ஓர் உயிர்ச் சேதம் கூட பதிவாகாமை பெரும் ஆச்சரியமானது என நகரின் மேயர் Jeff Lehman தெரிவித்துள்ளார்.