Home உலகம் தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டம் தீவிரம்

தென்னாபிரிக்க ஆர்ப்பாட்டம் தீவிரம்

by Jey

தென்னாபிரிக்காவில் ஆர்ப்பாட்டம் உக்கிர நிலையை அடைந்துள்ளது. தென்னாபிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜெகப் சுமா கைது செய்யப்பட்டதையடுத்து தென்னாபிரிக்காவில் வன்முறைகள் ஆரம்பமாகின. இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இதனால் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் வர்த்தக நிலையங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிலர் வர்த்தக நிலையங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் தென்னாபிரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவ வீரர்கள் 25 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

related posts