தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கு பாடசாலைக்குள் நுழைய சீனா தடை விதித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன. மாணவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தடுப்பூசியை பெற்றிருத்தல் வேண்டும். தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள பல நகரங்களில் 12 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி தொடர்பான விபரங்கள் உறுதிசெய்யப்பட்டதன் பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். சீனாவின் சில பகுதிகளில் இதுவரை தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முழுமையடையவில்லை. இவ்வாறான நிலையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு மாணவர்களுக்கு சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.