சுவிட்சர்லாந்தின் பல இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏரிகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுவதாகவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த நூற்றாண்டில் ஏற்படக்கூடிய மிகப் பெரிய மழை வெள்ளம் ஏற்படும் என வெளியிடப்பட்டிருந்த அச்சம் தற்பொழுது குறைந்துள்ளது.
ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதனால் வீதிகளிலும் நீர் நிரம்பி வழியும் நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஜெர்மனியைப் போன்று அல்லது சுவிட்சர்லாந்தில் இதுவரையில் மழை வெள்ளம் காரணமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏரிகள் மற்றும் ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு செல்வதனை மக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
நீர் நிலைகளுக்கு மிக அருகாமையில் காணப்படும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகக்கூடிய அபாயம் காணப்படுவதாக மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில கான்டன்களில் தொடர் மழையினால் வீதிப் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது.