கனேடிய வதிவிடப்பாடசாலைகளில் திட்டமிட்ட அடிப்படையில் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வதிவிடப்பாடசாலைகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காச நோயினால் பாதிக்கப்பட்டு மரணித்தமை சாதாரணமானதல்ல என தெரிவிக்கப்படுகின்றது.
காச நோய் தொடர்பான இரண்டு நிபுணர்கள் இந்த விடயம் குறித்து தங்களது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.
காச நோய் குறித்து கலாநிதி பட்டத்திற்காக ஆய்வு செய்யும் Lena Faust மற்றும் அல்பர்ட்டா பல்கலைக்கழகத்தின் காசநோய்த் திட்ட மதிப்பீட்டு மற்றும் ஆய்வு பிரிவின் முகாமையாளர் Courtney Heffernan ஆகியோர் இந்த ஆய்வினை நடாத்தியுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் தொற்று நோய் உருவாக்கப்பட்டு நோய் பரவ விடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப் பகுதியில் காச நோய் பெருந்தொற்றாக பரவியிருந்த போதிலும் சாதாரண கனேடிய சிறார்களுக்கு மத்தியில் பதிவான மரணங்களை விடவும் பழங்குடியின வதிவிடப்பாடசாலைகளில் மரணங்கள் பாரியளவில் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
அல்பர்ட்டா மாகாணத்தில் மட்டும் வதிவிடப்பாடசாலைகளைச் சேர்ந்த 28 வீதமான சிறார்கள் காச நோயினால் உயிரிழந்துள்ளனர்.