ஜனநாயகத்தைப் பற்றி பேசும் எதிர்க்கட்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை எதிர்க் கட்சியிலிருந்து நீக்குமா? என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மலையகத்திலுள்ள சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் அது ரிசாத் பதியுதீன் வீட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பொலீசாரின் விசாரணையில் குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து வாய் திறக்காமல் இருப்பதாகவும் ஜனநாயகம் பற்றி பேசுவது உண்மையானால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி பதியூதினை எதிர்க்கட்சியில் இருந்து நீக்குமாறு காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.