வதிவிடப்பாடசாலை புதைகுழி விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணைக்கு ஆதரவு வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
அண்மைய நாட்களாக கனடாவில் இயங்கி வந்த வதிவிடப்பாடசாலை பிரதேசங்களில் புதைகுழிகள், சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது.
இந்த நடவடிக்கையானது பழங்குடியின இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த அடையாளம் காணப்படாத புதைகுழிகள் மற்றும் சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடாத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்மால் அதனை செய்ய முடியாது எனவும் வழக்குரைஞர்கள் மற்றும் பொலிஸார் இந்த விவகாரம் குறித்து குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.