Home இந்தியா 1.75 கோடி பெறுமதியான வாளை கடவுளுக்கு காணிக்கையாக்கிய நபர்

1.75 கோடி பெறுமதியான வாளை கடவுளுக்கு காணிக்கையாக்கிய நபர்

by Jey

ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருமலை திருப்பதியில் (TTD) வீற்றிருக்கும் வெங்கடேச பெருமாளுக்கு, சுமார் 5 கிலோ எடையுள்ள வாள் ஒன்றை திங்கள்கிழமை அன்று, காணிக்கையாக வழங்கியதாக கோயிலின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானின் பக்தரான ஒரு தொழிலதிபர், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிறகு, பெருமாளுக்கு ‘சூர்யகதாரி’ என்ற வாளை காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி (Tirupati) கோவிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் கூடுதல் ஈ.ஓ ஏ. வி.தர்ம ரெட்டியிடம் இந்த காணிக்கை ஒப்படைக்கப்பட்டது. இரண்டு கிலோ தங்கம் மற்றும் மூன்று கிலோ வெள்ளியினால், இந்த வாளின் மதிப்பு ஒரு கோடி ரூபாஉ என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த நகைக்கடைக்காரர்களால் சிறப்பாக தயாரிக்கப்பட்டது, மேலும் இத தயாரிக்க ஆறு மாதங்கள் ஆனது.

இது போன்ற விலையுயர்ந்த தங்க வாள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், ஒரு பிரபல ஜவுளி வர்த்தகர் மற்றும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பக்தர், தங்க வாளை காணிக்கையாக வழங்கியிருந்தார். அந்த தங்க வாள் ஆறு கிலோ தங்கம் கொண்டதாக கூறப்படுகிறது, இதன் மதிப்பு ₹1.75 கோடி.

சூர்யகதாரி என்பது திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி வைத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்று என வேதங்களில் கூறப்பட்டுள்ளது. சூர்யா கதாரி என்ற சொல் சூர்ய (சூரியன்) + கதாரி (வாள்) என்று பொருள்படும். விஷ்ணுவின் வாளான இது ‘நந்தகா’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த வாள் சூரிய கடவுளால் பரிசளிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

related posts