கிளவுட்-கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்தை ஐந்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான சமீபத்திய சுவிஸ் முடிவுக்கு எதிராக கூகிள் முறையீடு செய்துள்ளது. சுவிஸ்சின் இந்த டெண்டர் செயல்முறை, தரவு இறையாண்மையைப் பாதுகாப்பவர்களாலும் விமர்சிக்கப்படுகிறது.
ஃபெடரல் துறைகளுக்கான cloud-storage முறையை உருவாக்குவதற்கு அமெரிக்க நிறுவனங்களான அமேசான், IBM, மைக்ரோசாப்ட், ஆரக்கிள் மற்றும் சீன நிறுவனமான அலிபாபா என்பவற்றை பெயரிட்டு கடந்த மாதம் சுவிஸ் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவை கூகிளின் முறையீடு இலக்குவைத்துள்ளது.
சுவிஸ் அரசாங்கத்தின் முடிவை கூகிள் ஆழமாக மதிப்பீடு செய்த பின்னர், கூகிளின் cloud சேவை சுவிசின் தேவைகளுக்கு ஏற்றது என்பதையும், பணியை மேற்கொள்வதற்கு இது மிகச் சிறந்தது என்பதை உறுதிப்படுத்தியதாகவும் கூகிள் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
கூகிளின் மேல்முறையீடு சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திய பெடரல் சான்சலரி, இந்த முறையீடு பெடரல் நிர்வாக நீதிமன்றத்தால் ஆராயப்படும் என்று கூறினார்.