கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத அல்பர்ட்டா பிரஜைகளே அதிகளவில் நோய்த் தொற்றுக்கு இலக்காகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் மரணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள் என தெரியவந்துள்ளது.
அல்பர்ட்டாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் டினா ஹின்ஷாவ் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
கொவிட் மரணங்களின் 91 வீதமும், கொவிட் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் 95 வீதமானவர்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் என தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டா மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னமும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.