Home இலங்கை நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்ட பொறுப்பு கூறல் அவசியமானது – பிரதமர்

நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்ட பொறுப்பு கூறல் அவசியமானது – பிரதமர்

by Jey

இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அர்த்தமுள்ள பொறுப்பு கூறல் செயன்முறையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

கறுப்பு ஜூலை இனக் கலவரம் இடம்பெற்று 38 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இனக் கலவரத்தில் உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

வலுவான கனடாவை கட்டியெழுப்புவதற்கு தமிழர்களின் பங்களிப்பு மிகவும் பாராட்டப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பு ஜூலை இனக் கலவரத்தில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் நிரந்தரமான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அர்த்தமுள்ள பொறுப்பு கூறல் பொறிமுறைமை ஒன்று அவசியம் எனவும் அனைத்து இன சமூகங்களுக்கும் இடையில் நம்பிக்கையை உருவாக்க வேண்டுமெனவும் பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

related posts