ஆயுத முனையில் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரம்டனில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்,
ஆயுத முனையில் மிரட்டி நபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு சில தினங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்பய்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கிகள் சட்டவிரோதமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஓர் வன்முறைச் சம்பவம் எனவும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.