சுவிஸ் கொவிட் சான்றிதழ் சோதனைகளில் இதுவரை 136 தரவுக் குழறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது இயல்பானது எனவும், இது பாரியளவிலான programming code மற்றும் உள்கட்டமைப்புகளால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் வரையான தரவுகளைக்கொண்டு தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) வெளியிட்ட அறிக்கையில், அறிவிக்கப்பட்ட குழறுபடிகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை அளித்தது. பல முக்கியமான குறைபாடுகள் இன்னும் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட சில குழறுபடிகள் ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
ஜூன் 7, 2021 முதல் சுவிட்சர்லாந்தில் கொவிட் -19 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சான்றிதழில் கொவிட்-19 தடுப்பூசி, சோதனை முடிவு அல்லது வைரஸ் இருந்தது ஆவணப்படுத்துகின்றது. சான்றிதழ் காகித வடிவத்தில் அல்லது QR குறியீட்டைக் கொண்ட PDF ஆவணமாக வழங்கப்படுகிறது. இது நபரின் குடும்பப்பெயர், முதல் பெயர், பிறந்த திகதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் 1,000 க்கும் மேற்பட்ட நபர்களுடனான பெரிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர், அல்லது இரவு விடுதிகள் நடன நிகழ்வுகளுக்கு செல்ல விரும்பும் எவரும் இந்த சான்றிதழை காண்பிக்க வேண்டும்.