காலி தொடக்கம் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையினூடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்கள் மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னாரினூடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடும் காற்றும் மற்றும் கடற்கொந்தளிப்பு நாளை (26) பிற்பகல் 2.30 மணி வரை நீடிக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கிணங்க, காலியில் இருந்து ஹம்பாந்தோட்டையினூடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னாரினூடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாக காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்களை மிக அவதானத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.