டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கனடா முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளது.
21 வயதான மார்கிரட் மெக் நீல் என்ற வீராங்கனை இந்த சாதனையை படைத்துள்ளார்.
பெண்களுக்கான 100 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அவர் இவ்வாறு வெற்றியீட்டியுள்ளார்.
மெக் நீல் முதல் 50 மீற்றர் வரையிலான தூரத்தை கடக்கும் போது ஏழாம் இடத்திலேயே இருந்தார் எனவும், பின்னர் வேகத்தை அதிகரித்து முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
மெக் நீல் இந்தப் போட்டி தூரத்தை 55.59 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கம் வென்றெடுத்துள்ளார்.