Home உலகம் சீரற்ற காலநிலையினால் பல நாடுகள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் பல நாடுகள் பாதிப்பு

by Jey

சீரற்ற காலநிலையினால் உலகின் பல நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் முதல் இந்தியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக பல உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. வட இந்தியாவில் ஏற்பட்ட மண் சரிவினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

வட இந்தியாவின் மலைப்பகுதியிலேயே இம் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை உச்சியிலிந்து பாரிய கல் ஒன்று புரண்டதை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

மலை உச்சியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாலமும் இதனால் சேதமடைந்தது. உயிரிழந்த அனைவரும் இப்பகுதிக்கு சுற்றுலாவுக்கென வருகை தந்தவர்கள் என அறிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். கடந்த வாரம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவிய சீரற்ற காலநிலையினால் 136 பேர் உயிரிழந்தனர்.

கொஸ்டாரிகா இராச்சியத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கன மழையுடன் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

கொஸ்டாரிகா இராச்சியத்தின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளும் அதிவேக நெடுஞ்சாலைகளும் பயிர் நிலங்களும் சேதமடைந்துள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அச்சுறுத்தல் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையினால் இடம்பெயர்ந்துள்ள ஆயிரத்து 500 இற்கும் கூடுதலானோர் தற்காலிகமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

related posts