தாய்லாந்தில் அச்சுறுத்தலுடன் கூடியவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 60 வயதிலும் கூடியவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் எடை கூடியவர்கள் ஆகியோரை அச்சுறுத்தல் காணப்படுகின்ற நபர்களாக கருதி தடுப்பூசிகளை வழங்க தாய்லாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் காணப்படுகின்ற தடுப்பூசிகளுக்கான பற்றாக்குறை காரணமாக வைரஸ் தொற்றக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றவர்களுக்கு துரிதமாக தடுப்பூசிகளை வழங்குவதே நோக்கமாகும். அந்நாட்டு சனத்தொகையில் 5.6 சதவீதமானோர் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளதுடன் 18.9 சதவீதமானோர் ஒரு டோசை மாத்திரமே பெற்றுள்ளனர்.
வைரஸ் பரவலை தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சட்ட வரையறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.