ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என முதல்வர் டக் போர்ட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை திறப்பது குறித்து விரிவான திட்டமொன்று முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வார ஆரம்பத்தில் கல்வி அமைச்சரினால் பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து விரிவாக விபரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக்கு செல்லும் இரண்டு மில்லியன் மாணவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் ஏனைய கல்விசார் ஊழியர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதமளவில் பாடசாலைகளை மீளத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத மாணவர்களுக்கு எவ்வாறான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளது.