Home கனடா வதிவிடப்பாடசாலை கற்று உயிருடன் இருப்பவர்கள் பொய்யுரைக்கின்றார்கள்

வதிவிடப்பாடசாலை கற்று உயிருடன் இருப்பவர்கள் பொய்யுரைக்கின்றார்கள்

by Jey

கத்தோலிக்க வதிவிடப்பாடசாலைகளில் கற்று தற்பொழுது உயிருடன் இருப்பவர்கள் பணத்திற்காக பொய்யுரைக்கின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வின்னிபிக் கத்தோலிக்க தேவாலயத்தின் அருட் தந்தையான Deena Hinshaw என்பவரே இவ்வாறு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வதிவிடப் பாடசாலைகளில் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாக பணத்திற்காக பிரச்சாரம் செய்யப்படுவதாக்க் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்றதாகவும் வேறும் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றங்களில் நட்டஈடு பெறும் நோக்கிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசாங்கத்திடம் பணம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விதிவிடப் பாடசாலைகளில் கற்ற பழங்குடியினத்தவர்கள் இவ்வாறு பொய் உரைத்து வருவதாக்க் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலதிகமாக பணம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் பொய்யுரைக்க வேண்டும் எனவும் எவ்வளவு பொய்யுரைக்கின்றார்களோ அவ்வளவு பணம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது 22 வருட குருத்துவ காலத்தில் சந்தித்த பழங்குடியினத்தவர்கள் வதிவிடப்பாடசாலைகளை விரும்புபவர்களேயாவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வதிவிடப்பாடசாலைகளில் திட்டமிட்ட அடிப்படையில் பழங்குடியன சிறார்கள் இனவழிப்பிற்கு உட்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts