Home கனடா கொவிட் கெடுபிடிகளை தளர்த்துவது தவிர்க்க முடியாது

கொவிட் கெடுபிடிகளை தளர்த்துவது தவிர்க்க முடியாது

by Jey

அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் கெடுபிடிகளை தளர்த்துவது தவிர்க்க முடியாது என மாகாண சுகாதார அமைச்சர் Tyler Shandro தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில், கொவிட் சுகாதார நடைமுறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஆபத்தான நிலையில் கொவிட் கெடுபிடிகளை அரசாங்கம் தளர்த்துவது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு ஆபத்து குறைவு எனவும் நோய்த் தொற்று பரவுகை குறைவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பாதுகாப்பினைப் போன்றே ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் Deena Hinshaw பரிந்துரைகளின் அடிப்படையில் சுகாதார நடைமுறைகள் தளர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய மாகாணங்களும் இந்த நடைமுறையை பின்பற்றும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

related posts