ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அடுத்த வாரம் முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் இங்கிலாந்து வர அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கொள்கை ஆகஸ்ட் 2 ஆம் திகதி அதிகாலை 4:00 மணி முதல் (0300 GMT) அமுலுக்கு வரும். விமான நிறுவனங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மாற்றமாக இது அமைந்துள்ளது.
16 மாதங்களாக தடைப்பட்டிருந்த கப்பல் சர்வதேச பயணங்கள், ஒகஸ்ட் 2ஆம் திகதி முதல் இங்கிலாந்திலிருந்து மீண்டும் தொடங்கலாம் என்று அரசாங்கம் கூறியது.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்ற பயணிகள் தனிமைப்பட வேண்டியதில்லை. ஜூலை மாதத்தில் நடுத்தர ஆபத்துள்ள நாடுகளிலிருந்து திரும்பும் தடுப்பூசி போடப்பட்ட பிரித்தானியர்களுக்கான தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஹீத்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், கொவிட் தொற்றால் 4 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளன.
பயண முகவர் நிலையங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பிற நிறுவனங்கள் பயணங்களை மீள ஆரம்பிப்பதன் மூலம் பயனடைகின்றன என்று ஒரு தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.