நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தன் நாற்காலியில் அமர்ந்தபடியே, புத்தகத்தை வெளியிட்டதால், அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக, ஓய்வுபெற்ற பொறியாளர் சுப்பிரமணியன் பணியாற்றி வருகிறார். காவிரி பிரச்னை தொடர்பாக 1970 முதல் 2018 வரை, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விபரங்கள், உச்ச நீதிமன்றம் வழக்கை கையாண்ட விதம், வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றை தொகுத்து, ‘காவிரி நதிநீர் பிரச்னை – உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம்’ என்ற புத்தகத்தை, சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தை, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தன் அலுவலக இருக்கையில் அமர்ந்தபடியே வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை, பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா நின்றபடி பெற்றுக் கொண்டார்.
காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மூத்த பொறியாளர் எழுதிய புத்தகத்தை, அமைச்சர் தன் இருக்கையை விட்டு எழாமல் வெளியிட்டதும், அதை ஐ.ஏ.எஸ்., அதிகாரி நின்று கொண்டு பெற்றதும், மற்ற அதிகாரிகளை முகம் சுழிக்க வைத்தது.