பிரான்சில் உணவகங்கள் மற்றும் பிற இடங்களுக்குள் நுழைவதற்குத் தேவைப்படும் சுகாதார பாஸுக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த சுமார் 3,000 பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நான்காவது கொரோனா அலை தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட, கட்டாய கொரோனா பாதுகாப்பு பாஸ் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பொது இடங்களில் நுழைவதற்கு கொரோனா வைரஸ் சுகாதார பாஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர்.
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக இடம்பெற்றாலும், பாரிசில் சிலர் கலகம் அடக்கும் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டது.
இந்த பாஸ் நடைமுறை சமூகத்தைப் பிரித்தாள்வதாகவும், மனித உரிமைகள் மதிக்கப்படும் நாட்டில் இதைச் செய்வது நம்பமுடியாதது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.