மியன்மாரில் எதிர்வரும் 2 வருடங்களில் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசர நிலை நீக்கப்படும் என அந்நாட்டு இராணுவத்தளபதி உறுதியளித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மியன்மாரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. நாட்டின் அரச தலைவரான ஆங்சாங் சூச்சி ஜனாதிபதி வின் மைன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.