கனடாவில் கொவிட்19 தடுப்பூசிகள் விரயமாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான கொவிட் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் காலாவதியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவில் காணப்படும் மருந்தகங்களில் இவ்வாறு தடுப்பூசிகள் காலாவதியாகக் கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி ஆயிரக் கணக்கான மொடர்னா தடுப்பூசிகள் காலாவதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மருந்தக ஒன்றியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Justin Bates தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் விரயமாகுவதனை தடுத்து நிறுத்துவதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.