அமெரிக்காவின் லுசியானா மற்றும் புளோரிடா ஆகிய மாநிலங்களில் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
அமெரிக்காவில் டெல்டா பரவலுடன் இந்நிலை ஏற்படடுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. நேற்றயை தினம் இம்மாநிலங்களில் அதி கூடிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். புளோரிடா மாநிலத்தில் 10 ஆயிரத்திற்கும் கூடுதலான தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்டா பரவலையடுத்து கட்டிட தொகுதிகளில் உள்ளேயும் முகக் கவசங்கள் அணிவதை கட்டாயப்படுத்த லுசியானா ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் புளோரிடா மாநிலத்தில் தடுப்பூசிகளை வழங்கும் மத்திய நிலையங்களில் நீண்ட அலைவரிசைகளை அவதானிக்க முடிந்துள்ளது. ஆக்கன்சா , மிசூரி மற்றும் நெவாடா ஆகிய மாநிலங்களிலும் நிலைமை மோசமடைந்து வருவதாக அறிவிக்கப்படுகின்றது.