சம்பள உயர்வு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 13 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரிக்கையை முன்வைத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.