ஒன்றாரியோ மாகாணத்தில் இயல்பு நிலை என்பது வெறும் மாயை என ஆசிரிய தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
மாகாண அரசாங்கம் பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளது.
எனினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்தின் திட்டங்கள் பொருத்தமானவை கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் ஒன்றாரியோ பாலர் பாடசாலை ஆசிரியர் ஒன்றியம், கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம், இரண்டாம் நிலை ஆசிரியர் ஒன்றியம் உள்ளிட்ட முன்னணி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன.
பாடசாலை பிள்ளைகள் வகுப்புக்கு திரும்புவதே ஆசிரியர்களின் விருப்பமும் கூட என்றாலும் அது ஓர் கிரமமான அடிப்படையில் நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.