Home உலகம் பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்; இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்; இந்தியா கடும் கண்டனம்

by Jey

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் உள்ள போங் நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒன்று இரும்பு கம்பிகள், தடிகளுடன் நுழைந்து அங்கிருந்த சாமி சிலைகளை அடித்து நொறுக்கி சூறையாடியது.

இந்த கொடூர செயல்களை அவர்கள் பேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பினர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் இந்து கோவில் சூறையாடல்; சிலைகள் உடைப்பு – இந்தியா கடும் கண்டனம் இருக்கிறது.

இது தொடர்பாக இந்து மத தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தானில் இந்து கோவில்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து இந்த கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.

related posts