Home இந்தியா தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

by Jey

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நீட்டிப்பில் முக்கியமான சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

– செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை பள்ளிகள் திறக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

– 50 சதவிகித மாணவர் வருகையுடன் இந்த வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ALSO READ: கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

– பள்ளிகளில் தேவையான கொரோனா நெறிமுறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு தமிழக பள்ளிக் கல்வித் துறையை கேட்டுக்கொண்டுள்ளது.

– ஆகஸ்ட் 16 முதல் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகளைத் திறக்கவும் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

– விதிகளைப் பின்பற்றாமல் அதிக வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவைக்கை எடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

– நோய்க்கட்டுபாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

– இறைச்சி, மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தடுக்க தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவிறை வழங்கப்பட்டுள்ளது.

– வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வர அனுமதி இல்லை. பொது மக்கள் அனுமதி இன்றி இந்த நாட்களில் பூஜைகள் மட்டும் நடக்கும்.

related posts