மானிடோபாவில் நிலவி வரும் கடுமையான வறட்சி நிலைமையினால் கால்நடை வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுவர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் குளிர்காலத்தில் கால்நடைகளுக்கு உணவு வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சி நிலைமைகளினால் பண்ணையாளர்களுக்கு கால் நடை வளர்ப்பிற்காக கூடுதல் பணத்தை செலவிட நேரிட்டுள்ளது.
கடந்த 150 ஆண்டுகளில் வின்னிபிக்கில் இவ்வாறான ஓர் வறட்சி நிலைமை உருவாகியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.