லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ், மலையாளம் என்று பிசியாக, கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் (vignesh shivan nayanthara) காதலில் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தன் அடுத்த படத்திற்கான புரோமோசனில் நயன்தாரா (Nayanthara) கலந்துக் கொண்டபோது நெறியாளர் கையில் இருக்கும் மோதிரம் அழகாக உள்ளது என்று சொன்னபோது அது என் நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விக்னேஷ் சிவனுக்கும் (Vignesh Shivan) நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் என்று நீண்ட நாட்களாக செய்திகள் வந்து கொண்டே உள்ள நிலையில், சிறிது நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் நயன்தாரா தரப்பில் இருந்தும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக யாரும் சொல்லாததால் இது வதந்தியாகவே இருந்தது. தற்போது சம்பந்தப்பட்ட நயன்தாராவே தன் பேட்டியில் சொல்லியிருப்பதால் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது