Home இலங்கை அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

by Jey

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று மேற்கொள்ளப்பட இருந்த அமைச்சரவை மாற்றம் அவசர நிலை காரணமாக பிற்போடப்பட்டதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றத்தின் படி கீழ்வரும் மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் – வௌிவிவகார அமைச்சர்

தினேஸ் குணவர்த்தன – உயர்கல்வி அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – கல்வி அமைச்சர்

பவித்ரா வன்னியாராச்சி – மின்சாரதுறை அமைச்சர்

வைத்தியர் ரமேஸ் பத்திரன – சுகாதார அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல – பெருந்தோட்டத்துறை அமைச்சர்

டளஸ் அலகப்பெரும – ஊடகத்துறை அமைச்சர்

சுற்றுலாத்துறை அமைச்சு குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சராக தினேஸ் நியமிக்கப்பட இருந்த போதும் கல்வி அமைச்சு மொட்டு கட்சிக்கு வேண்டும் என வந்த அழுத்தத்தால் கைவிடப்பட்டது.

கொரோனா அவசர நிலை காரணத்தால் ஜனாதிபதி தனிநபர்களை சந்திப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்க வருவோர் ரெபிட் என்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதன்படி நேற்று அவ்வாறு சந்திக்க வந்த ஐந்து அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலை காரணமாக நேற்யை அமைச்சரவை கூட்டமும் சூம் தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்றது.

அதனால் அமைச்சரவை மாற்றம் பிற்போடப்பட்டுள்ள போதும் விரைவில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

related posts