மானிடோபா மாகாண முதல்வர் Brian Pallister அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கட்சிக்கும் ஒர் புதிய தலைவரை தெரிவு செய்து கொள்ள காலம் மலர்ந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணத்திற்கும் புதிய முதல்வர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மிகவும் நேர்மையாக ஆட்சி செய்ய கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்கியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மானிடோபா மாகாணத்தின் முதல்வராக கடமையாற்ற கிட்டியமை வாழ்க்கையின் பெரும் பாக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தகுதியானவர்களின் ஒத்துழைப்பினால் சிறந்த ஆட்சியை முன்னெடுக்க முடிந்த்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.