வெளிநாட்டு பயணங்களுக்கு கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் குடிவரவு அமைச்சர் Marco Mendicino இந்த விடயம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ளும் கனேடியர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்ட கனேடியர்களுக்கு இவ்வாறு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
என்ன வகையான தடுப்பூசி ஏற்றப்பட்டது, எங்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் உள்ளடங்களாக இந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
எவ்வாறெனினும், உள்நாட்டில் பயன்படுத்துவதற்காக இதுவரையில் தடுப்பூசி சான்றிதழ்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.