கனேடியர்கள் சீனாவில் தண்டிக்கப்பட்டு வரும் விவகாரம் தொடர்பில் சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை சீனா நிராகரித்துள்ளது.
கனேடிய பிரஜைகளான Robert Schellenberg க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், Michael Spavor க்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கனேடியர்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
சீன அரசாங்கம் பழிதீர்க்கும் வகையில் கனேடியர்களை தண்டித்து வருவதாக கனடா முழுவதிலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே உள்ளிட்ட பலரும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் கனடாவின் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என கனடாவிற்கான சீனத் தூதரகமும், சீன வெளிவிகார அமைச்சும் தெரிவித்துள்ளன.
சீனாவின் நீதித்துறை இறைமையில் தலையீடு செய்யும் வகையில் கனடா கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.