கல்வித்துறை பணியாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் மருத்துவ ஒன்றியம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
கல்வித்துறையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கட்டாயமாக கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
12 வயதுக்கும் குறைந்த சிறார்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதில்லை என்ற காரணத்தினால் கல்விப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவது சிறார்களுக்கு பாதுகாப்பாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வகுப்பறைகளில் முகக் கவசங்களை அணிவதும் கட்டாயமாக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.