Home கனடா ஆப்கான் ஏதிலிகளை துரித கதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

ஆப்கான் ஏதிலிகளை துரித கதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

by Jey

ஆப்கானிஸ்தான் ஏதிலிகளை துரித கதியில் குடியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மோசமான சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கியூபெக்கில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

807 ஆப்கானிஸ்தான் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் 500 பேர் கனடாவை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

related posts