Home கனடா பிரதான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பம்

பிரதான கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பம்

by Jey

கனடாவின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி கனடாவில் பொதுத் தேர்தல் நடாத்துவதற்கான முன்மொழிவுகளை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே முன் வைத்துள்ளார்.

பிரதமர் ட்ரூடே இன்றைய தினம் ஒன்றாரியோவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியன் பின்னர் கியூபெக் மாகாணத்திற்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.

என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் றொரன்டோவில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

இதேவேளை, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர்  Erin O’Toole ஒட்டாவாவில் இன்று பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ட்ரூடேவின் கோரிக்கைக்கு அமைய ஆளுனர் நாயகம் மேரி சிமோன் நாடாளுமன்றை கலைத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட் நிலைமைகள் பாதகமாகக் காணப்படும் நிலையில் தேர்தல் நடாத்துவது பொருத்தமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்வதன் மூலமே நாட்டில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க முடியும் என பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

related posts