எதிர்வரும் நாட்களில் ஆயிரக் கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு அடைக்கலம் வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மோசமான சூழ்நிலையில் இவ்வாறு ஆப்கான் பிரஜைகள் கனடாவில் குடியேற்றப்பட உள்ளனர்.
ஆப்கான் பிரஜைகளை குடியேற்றும் நடவடிக்கைகளை கிரமமாக்கப்பட வேண்டுமென கனேடிய எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆயிரக் கணக்கான ஆப்கான் பிரஜைகள் நிர்க்கதியாகியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் குடியேற்றப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு உதவும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.