ஒன்றாரியோ மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்படுகின்றது.
முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி கட்டாயமாக்கப்படுதல் நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி அமுலுக்கு வரவுள்ளது.
தடுப்பூசி ஏற்றப்படாத மற்றும் பகுதியளவில் தடுப்பூசி ஏற்றப்பட்வடர்களே அதிகளவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோ மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைசார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கடுமையான கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.