நோவா ஸ்கோட்டியா மாகாணத்தில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிபரல் கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் நோவா ஸ்கோட்டியாவில் லிபரல் கட்சி ஆட்சி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவு வெளியிடப்பட முன்னதாகவே லிபரல் கட்சியின் தலைவர் Iain Rankin தோல்வியை ஒப்புக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்த தேர்தலில் எதிர்பார்ப்புக்களை மீறி முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டுள்ளது.
Tim Houston தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமாக காணப்படும் 55 ஆசனங்களில் 28 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.