கனடாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முகநூலில் அரசியல் பதிவுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட உள்ளது.
கடந்த காலங்களை விடவும் இந்த பொதுத் தேர்தலின் போது முகநூலில் அரசியல் பதிவுகள் கட்டுப்படுத்தப்பட உள்ளது.
தேர்தல் மற்றும் கொவிட்-19 நோய்த் தொற்று போன்ற விடயங்கள் தொடர்பில் பிழையான தகவல்கள் பதிவிடப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் நிறுவனத்திற்கான கனேடிய பணிப்பாளர் Kevin Chan இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய்யான தகவல்கள் அடங்கிய முகநூல் பதிவுகள் நீக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் அதேவேளை, சமூக ஊடகத்தை தூஸ்பிரயோகம் செய்வதற்கு எவ்வித சந்தர்ப்பமும் வழங்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் சார்பான உள்ளடக்கங்கள் அனைத்தும் நீக்கப்படும் என அர்த்தப்படாது என்ற போதிலும் பிழையான தகவல்கள் பதிவிடப்பட்டால் அவை நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.