கனடாவில் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடாத்தப்படும் என தேர்தல் திணைக்களத்தின் பிரதம அதிகாரி Stephane Perrault தெரிவித்துள்ளார்.
அதி உச்ச அளவில் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யக்கூடிய வகையிலான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி தேர்தல் நடாத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியது கட்டாயமாக்கப்படவில்லை.
தேர்தல் கடமைகளுக்காக சுமார் 250,000 கனேடியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குச் சாவடிகளில் கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.