கனடாவில் சுமார் ஒரு லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நாள் முதல் இதுவரையில் ஒரு லட்சம் சுகாதார பணியாளர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சுமார் 43 பேர் கொவிட் பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
டெல்டா பிறழ்வு காரணமாக நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவது அத்தியாவசியமானது என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.