8 வயதான ஆபிரிக்க சிறுமியை பாலியல் அடிமைச் சேவகத்திற்காக கொள்வனவு செய்த கனேடிய நபருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலைச் சேர்ந்த 60 வயதான Sylvain Villemaire என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஆபிரிக்காவிற்கு சென்ற போது குறித்த நபர், சிறுமியின் தாய்க்கு பணம் கொடுத்து சிறுமியை கொள்வனவு செய்துள்ளார்.
சிறுமிக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குவதாக குறித்த நபர் உறுதியளித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக இந்த சிறுமி கொடூரமான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த நீதிமன்றம் குறித்த நபருக்கு பதினெட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.