சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி மெங் வன்சூ குறித்த வழக்கு விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக வன்சூ குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மெங் வன்சூவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது குறித்த வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தற்பொழுது பூர்த்தியாகியுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்சூவை நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து நீதிபதியினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
இந்த கைது விவகாரத்தினால் சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
வன்சூவின் கைதினை எதிர்த்து கனேடியர்களுக்கு சீனாவில் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலைமைகளை அவதானிக்க முடிகின்றது.
இந்த வழக்கு குறித்த விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்படி, ஒக்ரோபர் மாதம் 21ம் திகதியின் பின்னர் வன்சூவை நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.